நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. அதிகனமழைக்கு வாய்ப்பு!
May 25, 2025, 18:30 IST
நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ள நிலையில், தென்மேற்கு பருவ மழையும் வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கி உள்ளது.

இந்நிலையில் நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ஆரஞ்சு அலர்ட் விடுத்து எச்சரித்துள்ளது.

அதே போன்று நாளை மே 26ம் தேதி திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை நேரத்தில் மின் சாதனங்களை கவனமுடன் கையாளுங்க. கர்ப்பிணிகள், முதியோர்கள், சிறுவர்களை மழை நேரத்தில் தனியே வெளியே அனுப்பாதீங்க.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
