வீட்டை விட்டு வெளியே வராதீங்க... 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!

 
ஆரஞ்சு


தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னை பெருங்குடியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது .  தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது.  

ஆரஞ்சு அலர்ட்

வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.  இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு  மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!!

அத்துடன்  ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து, நாளையும் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!