5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
ஆரஞ்ச்


 
தென்மேற்கு பருவமழை கேரளாவில்  முன்கூட்டிய தொடங்கியுள்ள நிலையில்  அம்மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புறம் மற்றும் வயநாடு  மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஜூன் 28ம் தேதி ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக  அங்குள்ள ஏராளமான ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில்  வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பல முக்கிய அணைகள் நிரம்பியுள்ளதால், அவை வரிசையாகத் திறக்கப்பட்டு வருகின்றன. வயநாடு மாவட்டத்திலுள்ள பனாசுரா அணை மற்றும் பத்தனம்திட்டாவின் மூழியாறு அணை   ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.

ஆரஞ்ச் அலர்ட்
திருச்சூரின் பீச்சி அணை நிரம்பியுள்ளதால் இன்று ஜூன் 28ம் தேதி பிற்பகல் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால், கரையோரம் வசிக்கும் மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் கஞ்சிரபுழா, மலம்புழா மற்றும் மீன்கரா ஆகிய அணைகள் நிரம்பியதால் இன்று அவை திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

3 மாவட்டங்களில் ரெட் அலர்ட், 9 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

இடுக்கி மாவட்டத்திலுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கியதும் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அதிகாரிகள், நேற்று ஜூன் 27ம் தேதி அறிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி  அணையின் நீர்மட்டம் 135.70 அடி உயரத்துக்கு நிரம்பியிருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அம்மாவட்டத்திலுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,220 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது