தென் மாவட்டங்களில் கனமழை... ஆரஞ்ச் அலர்ட்... மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 
ஆரஞ்சு அலர்ட்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை பெய்து வரும் நிலையில், இன்று கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  இன்று மாா்ச் 11ம் தேதி முதல் மாா்ச்  16ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்  இன்று மாா்ச் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செவ்வாய், புதன் ஆகிய இருநாள்கள் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web