மக்களே உஷார்... நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் இன்று ஜூன் 12ம் தேதி வியாழக்கிழமை இரவு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று நீலகிரி , கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை , அரியலூர் திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டது.
நாளை ஜூன் 13ம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி, கோவை , தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஜூன் 14, 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் கோவை , தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!