5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்!
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வானிலையில் திடீர் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி 9-ம் தேதி தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல் வரும் நாட்களிலும் பல மாவட்டங்களில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட வட மற்றும் மத்திய மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
