சென்னையில் நாளை கனமழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு நடுத்தர மற்றும் கனமழை சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 450 கி.மீ., காரைக்காலுக்கு தென்கிழக்கில் 250 கி.மீ. தொலைவில் நிலை பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலைக்குள் இலங்கை யாழ்ப்பாணம் - திரிகோணமலை இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
