ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை... தங்கம் தென்னரசு !

 
ஸ்டாலின்
 

மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில்  ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் தலைப்பின் கீழ் புதிதாக 1 கோடி உறுப்பினர்களை திமுகவில் இணைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது,  ‘ஓரணியில்  தமிழ்நாடு’ என்ற தலைப்பின் கீழ் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறோம்.  

ஸ்டாலின் தமிழக அரசு

ஜூலை 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்  பத்திரிகையாளர்களை சந்தித்து முறைப்படி இந்த உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைப்பார்.  அதற்கு அடுத்தபடியாக ஜூலை 2ம் தேதி அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லோரும் பேரணியாக சென்று இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்களை துவக்கி வைக்க இருக்கிறார்கள்.  
 ஸ்டாலின்
தொடர்ந்து ஜூலை  3ம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குச்சாவடி பூத்களிலும்  இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட உள்ளன.  ஆங்காங்கே இருக்கக்கூடிய வாக்குச்சாவடி முகவர்கள், டிஜிட்டல் ஏஜெண்டுகள், மற்ற அணி நிர்வாகிகள் இணைந்து ஒவ்வொரு பூத்களிலும் இருக்கக்கூடிய வீடுகளுக்கும் சென்று,  ஒவ்வொரு வீட்டிலும் தமிழ்நாட்டின் அரசின் திட்டங்களை , முதல்வரின்  4 ஆண்டு சாதனைகளை விளக்கி பொதுமக்களை திமுகவில் இணைப்பதற்கான பணிகளை செய்ய இருக்கிறோம்.
இந்த செயலி மூலமாக ஆன்லைனிலோ அல்லது  முகாம்களில் விண்ணப்பங்கள் மூலமாகவோ உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.  தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்பங்கள் உள்ளன. சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அனைத்து வீடுகளுக்கும் என்று அரசின் திட்டங்களை எடுத்துரைப்பார்கள். தமிழ்நாடு எந்த  ஒரு சவாலை எதிர்கொள்ளும் போதும் அதனை ஓரணியில் நின்று எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் இந்த ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திட்டம் சிறப்பாக நடத்தப்படும்.” எனக் கூறியுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது