வீட்லயே சமைச்சிடுங்க!! இன்னிக்கு ஸ்விக்கி வேலைநிறுத்தம்!!

 
ஸ்விக்கி

இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதில் முதன்மை நிறுவனமாக ஸ்விக்கி உள்ளது. குறிப்பாக கொரோனா மற்றும் கொரோனா காலத்திற்குப் பிறகு துரித உணவு சேவையில் முக்கிய இடம் பிடித்தது என்றே கூறலாம். இந்த நிலையில், ஸ்விக்கியில் பணிபுரியும் ஊழியர்கள், தமிழகத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் பகுதிகளில் இருக்கக்கூடிய ஸ்விக்கி ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வரை இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். புதிய ஸ்லாட்டு முறை திரும்ப பெற வேண்டும், ஏற்கெனவே வழங்கி வந்த டர்ன் ஓவர் தொகையை மீண்டும் வழங்க வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். ஆர்டர் எடுக்கும் போது ஒரு ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஸ்விக்கி

சென்னையில் மட்டும் 8000-க்கும் மேற்பட்ட ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழக முழுவதும் ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் வேலை பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஸ்விக்கி ஊழியர்கள் அறிவிப்பில், தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் (CITU) சார்பாக 22.05.2023 முதல் தமிழகத்தில் உள்ள SWIGGY ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதென முடிவெடுத்திருக்கிறோம்.

கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் இயக்கங்கள் நடத்தி கோரிக்கை மனு நிர்வாகத்திற்கும் தொழிலாளர் துறைக்கு அனுப்பியும் இதுவரை பேச்சு வார்த்தை மற்றும் எங்களது கோரிக்கை மீது தீர்வு காண இயலவில்லை. ஆகவே வேறு வழியின்றி 22.05.2023 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என 26.04.2023 அன்று நடந்த எங்களது சங்க பேரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்விக்கி

அதேநேரம், இந்த வேலை நிறுத்தத்தில் ஸ்விக்கி நிறுவனத்தை சேர்ந்த அனைத்து ஊழியர்களும் ஈடுபடவில்லை எனவும், ஒருதரப்பினர் பணிக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஓரளவிற்கு மட்டுமே ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு விநியோகிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web