பிரபல ஆஸ்கர் பட நடிகர் காரில் சடலமாக மீட்பு... திரையுலகில் சோகம்... !

 
லீ

 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த பாராசைட் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர்  தென்கொரிய நடிகர் லீ சன் கியூன். இவருக்கு வயது 48.   
  சியோலில் இன்று காலை லீ சன் கியூன், தனது காரில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். கடந்த சில மாதங்களாகவே சட்ட விரோத போதைப்பொருள் பயன்பாடு காரணமாக  அந்நாட்டு காவல் துறை விசாரணை வளையத்தில் சிக்கியிருந்தார்.

லீ

இது குறித்த விசாரனையில்   ‘இரவு விடுதி ஒன்றில் தவறுதலாக போதைப் பொருளை உட்கொண்டதாக' அவர் ஒத்துக் கொண்டார்.  இந்நிலையில் இன்று காலை தனது காரில் லீ சன் கியூன் உயிரிழந்த நிலையில்  சடலமாகக் கிடந்தார். இதனைக் கண்டு  அவரது மனைவி யோன்ஹாப் கதறித்துடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.  மேலும், லீ சன் கியூன் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது .

லீ

லீ சன் கியூன், 'பாராசைட்' படத்தில் பணக்கார தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். இது தவிர பல  தென் கொரிய திரைப்படங்களில்   முக்கிய வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  இது தவிர தென்கொரிய தொடரிலும்  லீ சன் கியூன் நடித்துள்ளார்.  லீ சன் கியூன் திடீர் மரணம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பிரபலங்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web