ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர், மனைவி மர்ம மரணம்!

 
ஹாலிவுட்


 
ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜெனே ஹேக்மேன்.இவரது  மனைவி, அவரது நாய் என அனைவரும் உயிரிழந்துவிட்டதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.  இந்த மரணத்துக்கு காரணம் குறித்து  காவல்துறை இதுவரை  விளக்கம் அளிக்கவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாண்டா ஃபே கவுண்டி காவல்துறை ஊடகப் பிரிவினர் டெனிஸ் அவில்லா நேற்று பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை பிற்பகல்  1.45 மணிக்கு பக்கத்து வீட்டாரின் அழைப்பின் பேரில் சோதிக்க சென்றபோது ஹேக்மேன், அவரது மனைவி பெட்ஸி அரகாவா, அவர்களது வளர்ப்பு நாய் இறந்து கிடந்ததை உறுதி செய்துள்ளார்.

ஹாலிவுட்
95 வயதாகும் ஜெனே ஹேக்மேன் ஹாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்.  இவர் 2 ஆஸ்கர் விருதுகள், 4 கோல்டன் குளோப் விருதுகள், 2 பிரிட்டீஷ் அகாதெமி விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது நடிப்பினை குறித்து பாராட்டுக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?