ஆஸ்கர் பரிந்துரைகள் வெளியீடு… 16 பிரிவுகளில் ‘சின்னர்ஸ்’ சாதனை!
2026-ம் ஆண்டுக்கான 98-வது ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த அறிவிப்பு உலக சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளது. சிறந்த நடிகர் விருதுக்கான போட்டியில் டிமோதி சாலமேட், லியோனார்டோ டி காப்ரியோ, எத்தன் ஹாக், மைக்கேல் பி ஜோர்டான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிவு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா சார்பில் பெரும் நம்பிக்கையுடன் அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் இது குறித்து பலரும் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
