ரூ.2,650 கோடி படம்… ராஸி விருதில் ‘மோசம்’ முத்திரை!
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்த மிக அதிக செலவுடைய திரைப்படமான ‘தி எலக்ட்ரிக் ஸ்டேட்’, இந்த ஆண்டுக்கான ராஸி விருதுகளில் மிக மோசமான படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.2,650 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இதன் காரணமாகவே மோசமான திரைப்பட பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் ராஸி விருதுகளில் ‘ஸ்னோ ஒயிட்’ மற்றும் ‘வார் ஆப் தி வேர்ல்ட்ஸ்’ தலா ஆறு பரிந்துரைகளுடன் முன்னிலையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து ‘ஹரி அப் டுமாரோ’ மற்றும் ‘தி எலக்ட்ரிக் ஸ்டேட்’ மூன்று பரிந்துரைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
