அதிர்ச்சி.. போதை ஊசியால் வந்த விபரீதம்.. இளம் கானா பாடகர் பரிதாப பலி..!!

 
தீபக் 

ஓட்டேரியில்   போதை ஊசி பயன்படுத்திய கானா பாடகர் இளைஞர் மயங்கிய நிலையில்  திடீர்  மரணம் ஓட்டேரி போலீசார் விசாரணை...

சென்னை வியாசர்பாடி பகுதியை  சேர்ந்தவர் தீபக்  (23) இவர் 11 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலை இல்லாமல் சமீப காலமாக  கானா பாடல்களை பாடி   வருகிறார்.நேற்று மாலை  புளியந்தோப்பு மாவட்ட  பி எஸ் மூர்த்தி நகர் ஜே பிளாக்  ஹவுசிங் போர்டு பின்புறம் நிற்க முடியாமல் தள்ளாடி கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.  அதன் பிறகு செல்போன் மூலம் தனது நண்பரான செல்வம் என்பவரை அழைத்து என்னால் நடக்க முடியவில்லை வந்து அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள வியாசர்பாடி என்னும் இடத்துக்கான பெயர்க் காரணம் என்ன?  மகாபாரதத்தை எழுதிய வயாசருக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? - Quora

 உடனடியாக சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த செல்வம் நண்பரான  தீபக் மயங்கிய நிலையில்  இருந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீபக் பக்கத்தில் இரண்டு போதை   ஊசிகள் இருந்துள்ளதும்  போதை ஊசியை தீபக் பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாகவும் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்வம் அழைத்துச் சென்றார்.

Installation of CCTV at Otteri Police Station | ஓட்டேரி காவல் நிலையத்தில்  சிசிடிவி பொருத்தும் பணி | Dinamalar

அங்கு இருந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது தீபக் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் தெரிவித்தனார்.  இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web