ஆளுநர் ரவியை டம்மியாக உக்கார வைத்துள்ளார் நம்ம முதலமைச்சர்... அன்பில் மகேஷ் ஆவேசம்!

 
அன்பில் மகேஷ்

தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அம்பேத்கர் பற்றியும் அவர் எழுதிய அரசியல் சாசனம் பற்றியும் பேசினார்.

ஆர்.என்.ரவி

அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநருக்கு எதிரான தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசினார். அதில், ” நமக்கு பைபிள், குரான் போன்றது அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம். இது எவ்வளவு முக்கியம் என்பது ஏப்ரல் 8ம் தேதி ஆளுநருக்கு அதிகாரமில்லை நாட்டை ஆள்பவருக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்டாலின் ரவி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்றால், அஜித் பட வசனம் போல, ‘உடம்பில் கை இருக்கும், கால் இருக்கும், ஆனால், உயிர் இருக்காது!’ என கூறுவது போல ஆளுநர் ரவியை டம்மியாக உக்கார வைத்துள்ளார் நம்ம முதலமைச்சர். நமக்காக இருக்கும் நீதிமன்றத்தை நாம் நாடி செல்வோம். நீதிமன்றத்திற்கு அரசியல் சாசனம் எனும் ஆயுதத்தை எடுத்து செல்வோம். இந்த ஆயுதத்தை கொண்டு எவ்வளவு பிற்போக்குத்தனமான நபராக இருந்தாலும் அவனை வீழ்த்திவிட முடியும். அம்பேத்கர் ஆதி திராவிடர் மக்களுக்கான தலைவர் இல்லை. அவர் பிற்போக்குவாதிகளுக்கு எதிரானவர்” என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web