நமது படைகள் 22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்தன... பிரதமர் மோடி பெருமிதம்..!

 
மோடி
 

டில்லியில் நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி  சந்திப்பின்  நூற்றாண்டு விழாக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு  பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதில்   100 ஆண்டுகளுக்கு முன்பு நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தியின் சந்திப்பு சுதந்திர இயக்கத்திற்கு ஒரு புதிய உத்வேகம் அளித்தது. ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள் முழு மனிதகுலத்திற்கும் ஒரு பெரிய சொத்து.

வைரலாகும் போட்டோஸ்... ஆபரேஷன் சிந்தூர் இலச்சினையை  வடிவமைத்த 2 ராணுவ வீரர்கள்  !
  பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ''ஆபரேஷன் சிந்தூர்'' உலகிற்கு தெளிவுப்படுத்தி உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் உதவியுடன் நமது படைகள் எதிரிகளை 22 நிமிடங்களில் மண்டியிட வைத்தன. இனி வரும் காலங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் என நான் நம்புகிறேன். தேச நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.

சிந்தூர் எல்லை இந்தியா பாகிஸ்தான் இராணுவம்
பாகிஸ்தான் உடன் மோதலின் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் திறன் தெளிவாக தெரிந்தது. இந்தியர்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை  காட்டியுள்ளோம். எந்தவொரு பாகுபாடும் காட்டாமல், ஆன்மிக கொள்கைகள் அடிப்படையில் அரசு செயல்படுகிறது” என பேசியுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது