காதில் துடைப்பக்குச்சியுடன் வறுமையில எங்க அம்மா உயிரிழந்துட்டாங்க... அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் பதிவு!

 
துரைமுருகன்


தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ராணிப்பேட்டை அடுத்த வாலாஜா ஊராட்சி ஒன்றியம் மற்றும் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டகுப்பம் ஊராட்சி, மருதம்பாக்கம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் கிராமம் மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சி - நெல்லிக் குப்பம் கிராமம், அக்ராவரம் கிராமம்  பகுதிகளில் அரசு சார்பில் ரூ.2 கோடி 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு நிறைவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  

துரைமுருகன்


கூட்டத்தில் மக்களிடையே சென்று ஒவ்வொருவரிடமும் குறைகளை கேட்டறிந்தார். அதனை உடனடியாக நிறைவேற்ற கலெக்டரிடம் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து  அமைச்சர் துரைமுருகன், 1970 முதல் 50 ஆண்டுகளாக இந்த தொகுதியை பார்த்து வருகிறேன். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன். அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவமனை  , 48 கோடி மதிப்பீட்டில் ஆற்று பாலம், மேல்பாடி ஆற்று பாலம் ஆகிய பணிகளை நிறைவேற்றி தந்துள்ளேன். விவசாயிகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்பவன் நான்.  அமைச்சராக இருந்த போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க கோப்புகளில் கையெழுத்திட்டவன் நான்.

துரைமுருகன்

என் இளமை பருவத்தில் விவசாய நிலத்தில் சேடை ஓட்டி, களை நீக்கி, நாற்று நட்டு விவசாயம் செய்தவன் நான். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. அதற்கு கரண்ட் பில் கட்ட கூட பணம் இல்லாத வறுமை. என் தாய் ஒவ்வொரு நகையாக கழட்டி கொடுத்துவிட்டு, வாழ்வின் கடைசி நொடியில் காதில் வெறும் துடைப்ப குச்சியுடன் வறுமையில் உயிர் விட்டார்” என வறுமையின் சூழலை பகிர்ந்ததோடு அமைச்சர் கண்கலங்கியது கூட்டத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web