இது உங்க சொந்த வீடு... பெற்றோரின் கனவை நனவாக்கிய தருணம்... மகன் நெகிழ்ச்சி வீடியோ!

 
ஆஷிஷ் ஜெயின்
 

மும்பையைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின், புதிய வீட்டை பெற்றோருக்கு சர்பிரைஸ் பரிசாக வழங்கி, அந்த தருணத்தை வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். வீடியோ  விரைவில் வைரலாகி அனைவரையும் நெகிழ்ச்சியுடன் நிரம்பச் செய்தது. வாடகை வீடு என்று நினைத்து உள்ளே வந்த பெற்றோர், சில நொடிகளில் தான் அந்த வீடு சொந்தமாகியுள்ளதை அறிந்து உணர்ச்சியில் மூழ்கினர்.

ஆஷிஷ் ஜெயின் சொத்து ஆவணங்கள் மற்றும் பெயர்ப்பலகையை பெற்றோரிடம் அளித்து உண்மையை வெளிப்படுத்தினார். தந்தை முதலில் அதிர்ச்சியடைந்தார்; பின்னர் மகிழ்ச்சியை தாங்கி மகனைக் கைஅணைத்து, நெற்றியில் முத்தமிட்டு உற்சாகமாக நடனமாடினார். தாய் முதலில் மௌனமாக இருந்தார்; பின்னர் உண்மையை புரிந்து கொண்டதும், கண்ணீர் விட்டு மகனை அணைத்தார்.

ஆஷிஷ் மென்மையாகச் சொன்ன “இந்த வீடு உங்களுடையது” என்ற வார்த்தை அந்த தருணத்தின் உச்சமாகும். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஆயிரக்கணக்கானோர் பாராட்டியுள்ள நிலையில், “அவர்களின் மகிழ்ச்சிதான் அனைத்தையும் விட பெரியது” என்ற ஆஷிஷின் கருத்து அனைவரின் இதயத்தை நெகிழ வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!