11,588 ரயில்வே பணியிடங்களுக்கு 1 கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

 
 11,588 ரயில்வே பணியிடங்களுக்கு 1 கோடிக்கும் மேற்பட்ட  விண்ணப்பங்கள்!  
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெயில்வேயில் ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட், சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட  11,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் இதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 

தற்போது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான  தேர்வுகள் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கான கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்றபடி மாறுபடும். சீனியர் கிளர்க், ஜூனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறன் அவசியம். இதேபோன்று வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், சரக்கு ரயில் மேனேஜர், ஸ்டேஷன் மாஸ்டர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க்  பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். 

ரயில்வே நடத்தும் இந்த என்.டி.பி.சி தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும். அந்த வகையில், இந்த முறையும் தேர்வர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப அவகாசம் 2024 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. தற்போது தேர்வு நடத்துவதற்கான நடைமுறைகளில் ஆர்.ஆர்.பி ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில்  இந்த தேர்வுக்கு 1.21 கோடிக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளதாக ரயில்வே தேர்வு வாரிய வட்டார தகவல்கள் கூறுகின்றன. இதில், 12 ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணிகளுக்கு சுமார் 63 லட்சம் விண்ணப்பதாரர்களும், டிகிரி கல்வி தகுதி கொண்ட பண்ணியிடங்களுக்கு சுமார் 58 லட்சம் பேரும் விண்ணப்பித்திருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web