பேரழிவு... இந்தோனேசிய வெள்ளத்தில் 1,000 பேருக்கு மேல் பலி!
மேலும், இந்தப் பேரிடரில் மாயமான 218 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளம் காரணமாகப் பொதுக் கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சுமத்ராவின் மூன்று மாகாணங்களில் மட்டும் 1,200 பொதுக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. 581 கல்வி கட்டிடங்களும், 434 வழிபாட்டுத் தலங்களும், 290 அலுவலகக் கட்டிடங்களும், 145 பாலங்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆச்சே மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ நேற்று ஆய்வு செய்தார். மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு உதவும் என்று அவர் உறுதியளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தோனேசியா மட்டுமல்லாமல், சமீபத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
