பேட்டரியில் தொடர் கோளாறு.... ஈ ரிக்‌ஷாவை ஷோரூம் முன் கொளுத்திய உரிமையாளர்... பகீர் வீடியோ!

 
ஈ ரிக்‌ஷா

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் ஷோரூம் வாசலில் ஈ-ரிக்ஷா உரிமையாளர் மோகன், தனது வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டரியில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ஷோரூம் நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்ற மோகன், திங்கள்கிழமை மதியம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஐந்தாவது சாலை பகுதியில் தானே தனது ஈ-ரிக்ஷாவுக்கு தீ வைத்தார். வாகனம் கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தை அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

வாகனம் எரிவதைப் பார்த்த பெண் ஒருவர் பயத்தில் கதறி அழுத காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், பேட்டரி பிரச்னையால் விரக்தியடைந்த உரிமையாளர் எடுத்த இந்த விபரீத முடிவு சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!