ஆக்சியம் – 4 திட்டம் மீண்டும் ஒத்தி வைப்பு!

 
ஆக்சியம்
 


 
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து  ஆக்ஸியம்-4  திட்டத்தை தயாரித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் முக்கியமான தனியார் விண்வெளி பயணமாகும்.  பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் ஏற்கனவே ஜூன் 19, 2025 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆக்சியம் 4

தற்போது, ஜூன் 22, 2025 (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 1:12 மணிக்கு (1:12 PM IST) ஸ்பேஸ்எக்ஸ்-இன் பால்கன் 9 ராக்கெட்டில் புதிய டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக  நாசா மற்றும் ஆக்ஸியம் ஸ்பேஸ் அறிவித்துள்ளன. இந்த ஒத்திவைப்புக்கு முக்கிய காரணமாக, பால்கன் 9 ராக்கெட்டில் கண்டறியப்பட்ட திரவ ஆக்ஸிஜன் கசிவு மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்ய பிரிவான ஸ்வெஸ்டா சேவை தொகுதியில் காணப்பட்ட புதிய அழுத்த கசிவு ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ளன.

இந்த கசிவுகளை சரிசெய்ய நாசா, ரோஸ்கோஸ்மோஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸியம்-4 பயணத்தில், முன்னாள் நாசா விண்வெளி வீரரும், ஆக்ஸியம் ஸ்பேஸ்-இன் மனித விண்வெளி பயண இயக்குநருமான பெக்கி விட்சன் தலைமையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) விண்வெளி வீரர் ஷுபான்ஷு ஷுக்லா (பைலட்), போலந்தைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி, மற்றும் ஹங்கேரிய விண்வெளி அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டிபோர் கபு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியா, போலந்து, மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் முதன்முறையாக ISS-ஐ அடையவுள்ளனர், இது இந்த நாடுகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில், விண்வெளி வீரர்கள் சுமார் இரண்டு வாரங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி, 60-க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது