ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை தூக்கிச் சென்ற கணவர்… பக்தர்கள் நெகிழ்ச்சி!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா சிஞ்சோலி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாயக்கா தேவி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வந்தனர். இந்த ஆண்டு மனைவிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுவாசக்கோளாறு ஏற்பட்டதால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இந்த ஆண்டு தரிசனம் செய்ய முடியாதோ என அவர் கவலை தெரிவித்தார்.
ಪತ್ನಿಗೆ ಮಾರಣಾಂತಿಕ ಕಾಯಿಲೆ - ಆಕ್ಸಿಜನ್ ಸಿಲಿಂಡರ್ ಜೊತೆ ಮಾಯಕ್ಕನ ದರ್ಶನಕ್ಕೆ ಕರೆತಂದ ವೃದ್ಧ!#oxygencylinder #mayakkadevi #husband #chikodi #Belagavi #KannadaNews #navasamajanews pic.twitter.com/HuQ1n1jcTA
— navasamaja (@navasamajanews) February 5, 2026
இதுகுறித்து மருத்தவர்களிடம் ஆலோசனை பெற்ற கணவர், ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை அழைத்து பெலகாவிக்கு வந்தார். பின்னர் மாயக்கா தேவி கோவிலில் தம்பதி இருவரும் சாமி தரிசனம் செய்தனர். மனைவி சுவாசிக்க உதவியாக அவர் சென்ற இடமெல்லாம் கணவர் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து சென்றார்.
இந்த காட்சியை பார்த்த பக்தர்களும் அங்கிருந்தவர்களும் நெகிழ்ச்சியடைந்தனர். சிலர் அதை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. முதுமையிலும் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
