பத்ம விருதுகள் பெறுபவர்களுக்கு என்னென்ன சலுகைகள்?

 
pathma

 

நாட்டின் உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. கலை, கல்வி, மருத்துவம், இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 5 பேருக்கு பத்ம விபூஷன், 13 பேருக்கு பத்ம பூஷன், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா, நாட்டிற்கு சிறப்பான சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படாது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட சான்றிதழ் மற்றும் பதக்கம் மட்டுமே வழங்கப்படும். ஆனால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி விலக்கு, ஏர் இந்தியாவில் முதல் வகுப்பு இலவச பயணம், ரயில்களில் ஏசி முதல் வகுப்பு இலவச பயணம் உள்ளிட்ட பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அரசு விருந்தினர் மாளிகைகளில் இலவச தங்கும் வசதி மற்றும் விமான நிலையங்களில் சிறப்பு அனுமதியும் கிடைக்கும்.

பத்மஸ்ரீ பத்மபூஷண் பத்ம

பாரத ரத்னாவுக்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளுக்கும் ரொக்கத் தொகை அல்லது பயண சலுகைகள் இல்லை. இது முழுக்க முழுக்க கௌரவ விருதாகவே வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் வழங்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் மட்டுமே கிடைக்கும். விருது பெயரை பெயருக்கு முன் அல்லது பின் பட்டமாக பயன்படுத்தக்கூடாது என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!