பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு… தமிழகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கவுரவம்!
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் பத்ம விருதுகள் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுச் சேவை மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர்.கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர் மற்றும் திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் சாதனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
