பத்மஸ்ரீ மாதவ் காட்கில் காலமானார்... சூழலியல் முன்னோடி... பிரபலங்கள் இரங்கல்!

 
மாதவ்

நாட்டின் தலைசிறந்த சூழலியல் அறிஞர், மாதவ் காட்கில் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 83.

புனேவில் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் மாதவ் உயிரிழந்தார். அவரது மறைவு சூழலியல் உலகில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Prudent Media Official (@prudentmediagoa)

1942-ம் ஆண்டு புனேவில் பிறந்த மாதவ் காட்கில், இந்திய சூழலியல் ஆராய்ச்சியில் முக்கிய ஆளுமையாக விளங்கினார். பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் 31 ஆண்டுகள் பணியாற்றி, சூழலியல் அறிவியல் மையத்தை உருவாக்கினார். மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கான ‘மாதவ் காட்கில் அறிக்கை’ மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றார்.

சூழலியல் சேவைக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் வழங்கி இந்திய அரசு அவரை கௌரவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் ‘சாம்பியன் ஆஃப் தி எர்த்’ விருதும் அவருக்கு கிடைத்தது. 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ள அவர், சூழலியல் பாதுகாப்பு இயக்கங்களுக்கு உறுதியான அடையாளமாக இருந்து வந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!