பத்மஸ்ரீ வனஜீவி ராமையா காலமானார்…. பிரதமர் மோடி இரங்கல்

கம்பம் மாவட்டத்தில் வனஜீவி ராமையா காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராமையா லட்சக்கணக்கான மரங்களை காக்க தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவருக்கு வயது 87. இன்று காலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். 60 ஆண்டுகளாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
இவர் இயற்கையை விரிவுபடுத்துவதற்காக ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக 2017 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவருடைய மறைவுக்கு தெலுங்கானா மாநில முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மோடி தமது இரங்கல் பதிவில் பூமிப்பந்தை பசுமை கோளாக மாற்றிய இவருடைய வாழ்க்கை எனவும், இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எனவும் அவரைப் பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!