பத்மஸ்ரீ பெருமை தான்... ஆனா பிள்ளைகளை படிக்க வைக்க கூட காசில்ல... பட்டினியில் வாடும் ஓவியர் கிருஷ்ணன் குடும்பம்!

 
கிருஷ்ணன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வெள்ளரிக்கோம்பை பகுதியைச் சேர்ந்த ஆலு குரும்பர் பழங்குடியின ஓவியர் ஆர்.கிருஷ்ணனுக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவரின் குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத நிலை இருப்பதாக அவரது மனைவி சுசீலா கண்ணீருடன் கூறியுள்ளார்.

கிருஷ்ணன்

சிறுவயதிலிருந்தே தாத்தாவிடம் ஓவியம் கற்ற கிருஷ்ணன், இயற்கைப் பொருட்களைக் கொண்டு வண்ணங்களை உருவாக்கி தனித்துவமான ஓவியங்களை வரைந்தவர். பாறைகள், சுவர்கள், துணிகளில் வரைந்த அவரது படைப்புகள் பலரின் கவனத்தை ஈர்த்தன. டெல்லி, சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் கண்காட்சிகள் நடத்தி, அப்துல் கலாம், வாஜ்பாய் போன்ற தலைவர்களிடமும் பாராட்டு பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிருஷ்ணன் உயிரிழந்த நிலையில், இப்போது பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது குடும்பத்துக்கு கலந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது. “அவர் உயிரோடு இருந்தபோது இந்த விருது கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்” என சுசீலா தெரிவித்தார். தற்போது நான்கு குழந்தைகளுடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் அவர், கல்விக்காகவே போராடி வருவது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!