பஹல்காம் தாக்குதலில் பலியான குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டன. குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதில் ஷாவின் துணிச்சலைப் பாராட்டி, அவரது மனைவி குல்னாஸ் அக்தருக்கு மீன்வளத் துறையில் நிரந்தர வேலை அளித்து, நியமனக் கடிதத்தை லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா வழங்கியுள்ளார்.
மேலும், அனந்த்நாக்கில் மீண்டும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என லெப்டினன்ட் கவர்னர் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
அவர்களில் 25 பேர் சுற்றுலாப் பயணிகளும், ஒரு உள்ளூர்வாசி என்பது குறிப்பிடத்தக்கது. பஹல்காமில் திடீரென பயங்கரவாதிகள் நுழைந்து, சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தனது சுற்றுலாப் பயணிகளைக் காப்பதற்காக குதிரை சவாரி தொழிலாளியான ஆதில் ஷா, பயங்கரவாதிகளின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!