பகீர்... வெள்ளத்தில் மிதந்து வந்த சடலம்... நெல்லையில் பரபரப்பு!

 
சடலம்

கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில், நெல்லையில், வெள்ளத்தில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி காரணமாக   தென்மாவட்டங்களில் மிகமிக  கனமழை  வெளுத்து வாங்கி  வருகிறது.குறிப்பாக  திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி   மாவட்டங்களில்  பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்தும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.    

நெல்லை

ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பேருந்து நிலையம்,   மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உட்பட  பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால்  மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை
இந்நிலையில் நெல்லை   பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் ஆண் ஒருவர் பிணம் மிதக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சடலம் மீட்கப்பட்டு யார் என்பது குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web