பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் பதற்றம்... பேச்சுவார்த்தை நடத்த ரஷியா வலியுறுத்தல்!

 
ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லைப்பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. 2001ஆம் ஆண்டு NATO படைகள் அமெரிக்க ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் நுழைந்தபின் தாலிபான்கள் ஒடுக்கப்பட்டனர். ஆனால் 2021ம் ஆண்டு நேட்டோ படைகள் விலகியதும் தாலிபான் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் இருநாடுகளுக்கிடையே உறவு மோசமடைந்தது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தெஹ்ரீக்-ஏ-தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுவுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் வழங்குகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. கடந்த ஓராண்டில் நடந்த தாக்குதல்களில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ‘ஆபரேஷன் காஸாப் லில் ஹக்’ என்ற பெயரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 133 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் வெளிப்படையான போர் நிலையை அறிவித்துள்ளார். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் நேரடி மோதலை தவிர்த்து தூதரக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ரஷியா வலியுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!