பாகிஸ்தான் - இந்தோனேசியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அரசுமுறைப் பயணமாகப் பாகிஸ்தானுக்குச் சென்றார். 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தோனேசியா அதிபர் ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். இஸ்லாமாபாத்தில் அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவம், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பாக 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பாகிஸ்தான் மாணவர்கள் கல்வி உதவித்தொகையுடன் இந்தோனேசியா சென்று பட்டப்படிப்பு படிப்பதற்கான அம்சங்கள் இந்த ஒப்பந்தங்களில் அடங்கும். இந்தோனேசியாவை மருத்துவத் துறையில் மேம்படுத்துவதற்காக, பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் அங்கு சென்று இந்தோனேசிய மருத்துவர்களுக்குத் தொழில்முறைப் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
