ரமலான் மாதத்தில் ரத்த ஆறு... மருத்துவமனை மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்... ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் கதறல்!

 
காபூல் காபூல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 'ஓமித்' போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று (மார்ச் 16) திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் உலகையே அதிரவைத்துள்ளது. 2,000 படுக்கைகள் கொண்ட இந்த மிகப்பெரிய மருத்துவமனையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், இதுவரை சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தத் தாக்குதலைப் பாகிஸ்தான் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த வான்வழித் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்களான ரஷீத்கான் மற்றும் முகமது நபி ஆகியோர் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து ரஷீத்கான் தனது எக்ஸ் (X) தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "காபூலில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்குவது ஒரு போர்க்குற்றம். புனிதமான ரமலான் மாதத்தில் மனித உயிர்கள் மீது காட்டப்படும் இந்த அலட்சியம் கவலைக்குரியது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணமானவர்களை ஐக்கிய நாடுகள் அவை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். "எப்போதும் போல நாம் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வருவோம், இன்ஷா அல்லாஹ்!" என்று ஆப்கான் மக்களுக்கு அவர் ஆறுதல் கூறியுள்ளார். ஒரு மருத்துவமனை மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!