23 நிமிடங்களில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன ... ராஜ்நாத் சிங் பெருமிதம்!
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. மே10 ம் தேதியுடன் போர் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானுடன் நடத்அதப்பட்ட போரில் குஜராத்தின் பூஜ் நகரில் உள்ள விமான படைத்தளம் மிக முக்கிய பங்காற்றியது. அந்த விமான படைத் தளத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நேரில் வருகை தந்தார். வீரர்களிடையே அவர் 1965 மற்றும் 1971 போரில் பூஜ் விமான படைத் தளம் மிக முக்கிய பங்கு வகித்தது. தற்போதைய போரிலும் இந்த விமானப்படைத் தளம் வெற்றியை எட்டிப் பிடித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரை வெற்றி பெறச் செய்த முப்படைகளின் வீரர்களுக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

இந்திய விமானப் படை மீண்டும் தனது வீரத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், அந்த நாட்டின் விமான படைத் தளங்களை இந்திய போர் விமானங்கள் துல்லிய தாக்குதல்கள் மூலம் அழித்தன. பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழையாமல் அந்த நாட்டின் எந்த மூலையையும் தாக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது.பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமையை பாகிஸ்தான் நேரடியாக உணர்ந்துவிட்டது. 23 நிமிடங்களில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன. இது இந்தியாவின் வீரத்தையும் வலிமையையும் எடுத்துரைக்கிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள், ரேடார்கள் அனைத்துமே போரில் மிகச் சிறப்பாக செயல்பட்டன. இதற்காக டிஆர்டிஓ அமைப்புக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும்.சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதியை தீவிரவாத அமைப்புகளுக்காக பாகிஸ்தான் அரசு செலவிடும். தற்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு ரூ.14 கோடியை வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவால் அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டி எழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை ஐஎம்எப் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
