இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் – 11 பேர் கைது!
இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஒரு படகை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தினர். படகில் இருந்த 11 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். படகு பறிமுதல் செய்யப்பட்டு குஜராத் ஜாகவ் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் ஏன் இந்திய நீர்ப்பரப்புக்குள் நுழைந்தனர் என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக விசாரணை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் EEZ பிராந்தியத்தில் நுழைந்ததாக பாதுகாப்பு பி.ஆர்.ஓ விங் கமாண்டர் அபிஷேக் குமார் திவாரி பதிவிட்டுள்ளார். இந்திய கடல்சார் பாதுகாப்பின் வலிமையை இந்த சம்பவம் மீண்டும் காட்டியுள்ளது. கடல் எல்லைகளில் தொடர்ந்த கண்காணிப்பு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
