ஜம்மு எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் ... பரபரப்பு!

 
ட்ரோன்

 

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டம் சில்யரி கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையில், பாகிஸ்தானைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் சனிக்கிழமை பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சில நிமிடங்கள் இந்திய எல்லைப் பகுதியில் சுற்றிய ட்ரோன், பின்னர் பாகிஸ்தானை நோக்கி திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ட்ரோன் தென்பட்டதும் சில்யரி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸார், பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பொதுமக்களும் உஷார்படுத்தப்பட்டனர்.

ட்ரோன் மூலம் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்கள் வீசப்பட்டதா என்பதை உறுதி செய்ய பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே வெள்ளிக்கிழமை ரத்தன்பூர் கிராமம் அருகிலும் இதுபோன்ற ட்ரோன் பறந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து நிகழும் இந்த சம்பவங்கள் பாதுகாப்பு அமைப்புகளை கவனமாக இருக்க வைத்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!