புதின் அறையில் அத்துமீறிய பாகிஸ்தான் பிரதமர்? வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!

 
பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொடர்பான ஒரு பரபரப்பான வீடியோ இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் ஒரு சர்வதேச அமைதி மாநாடு நடந்தது. அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் தனியறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஷெபாஸ் ஷெரீப் அனுமதி பெறாமல் அந்த அறைக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டது.

ஆர்.டி. இந்தியா (RT India) வெளியிட்ட வீடியோவின்படி, ரஷ்ய அதிபர் புடினைச் சந்திக்க ஷெபாஸ் ஷெரீப் சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்தாராம். அதன்பின் பொறுமையை இழந்த அவர், புடின் மற்றும் எர்டோகன் இருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்த வீடியோ கூறியது. அவர் சுமார் 10 நிமிடங்கள் அங்கிருந்துவிட்டு வெளியேறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது ஒரு பெரிய தூதரக மரியாதை மீறல் என்று பலரும் விமர்சித்தனர்.

சர்ச்சை அதிகமானதால், ஆர்.டி. இந்தியா அந்த வீடியோ பதிவை நீக்கிவிட்டது. இந்தச் சம்பவம் தவறாகச் சித்தரிக்கப்படலாம் என்று அவர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால், பாகிஸ்தான் ஊடகங்கள் வேறுவிதமாகக் கூறுகின்றன. ஷெபாஸ் ஷெரீப் இரு தலைவர்களையும் சந்தித்துப் பேசியதாகவும், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாகவும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம், பாகிஸ்தானுக்கு IMF வழங்கவுள்ள $7 பில்லியன் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மேலும் 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!