இந்தியாவுக்கு பாகிஸ்தான் இளையோர் தலைவர் மிரட்டல்!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இளையோர் பிரிவுத் தலைவர் காம்ரான் சயீத் உஸ்மானி, இந்தியாவுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தின் தன்னாட்சியில் இந்தியா தலையிட முயன்றாலோ, ‘அகண்ட பாரத’ கொள்கையை அந்நாட்டின் மீது திணிக்க முயன்றாலோ பாகிஸ்தானின் ஏவுகணைகள் சும்மா இருக்காது என அவர் மிரட்டியுள்ளார்.
Kamran Saeed Usmani made the remarks in a video statement in which he also called for a formal military alliance between Pakistan and Bangladesh.#Pakistan #Bangladesh
— News18 (@CNNnews18) December 23, 2025
https://t.co/jJnGUvOMNK
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் வங்கதேசம் அச்சுறுத்தப்படுவதாகவும், அந்நாட்டை ஒரு இந்து நாடாக மாற்ற இந்தியா முயற்சிப்பதாகவும் உஸ்மானி சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக வலுவான மூலோபாயத் திட்டம் தேவை என கூறிய உஸ்மானி, பாகிஸ்தானும் வங்கதேசமும் இணைந்து அதிகாரப்பூர்வ ராணுவக் கூட்டணியை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேற்கில் பாகிஸ்தானும், கிழக்கில் வங்கதேசமும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினால் இந்தியா கடும் சிக்கலில் சிக்கும் என்றும், அதே நேரத்தில் சீனா அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் எல்லைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
