நாளைக்குள் தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

 
 பாகிஸ்தானியர்

இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்கிழமை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்  நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பகல்காம் தாக்குதல்களை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அட்டாரி- வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி செல்கின்றனர். 
பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சார்க் விசா பெற்று இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டது.இந்நிலையில் தமிழ்நாட்டில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 
பாகிஸ்தானியர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர் என்ற தகவல்களை காவல்துறை சேகரித்து வருகிறது. பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் தமிழகத்தில் இருந்து வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?