இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானுக்கு உளவு... அதிர வைக்கும் வாக்குமூலம்!

 
india india

இந்தியாவின் வான் எல்லைகளைப் பாதுகாக்கும் மிக முக்கிய மையமான அசாம் மாநிலம் திருப்ருகார் 'சபுவா' (Chabua) விமானப்படை தளத்தில் ஒரு அதிர்ச்சிகரமான உளவுச் சம்பவம் அம்பலமாகியுள்ளது. அங்குப் பல்நோக்கு ஊழியராகப் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமித்குமார் (36), இந்திய ராணுவத்தின் மிக ரகசியமான தளவாட விவரங்களைப் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ (ISI)-க்கு கசியவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ரகசியத் தொடர்பில் இருந்த இவர், டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாகப் பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சல்மாரில் பிடிபட்ட ஒரு சந்தேக நபரைக் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோதுதான், அசாம் விமானப்படை தளத்தில் ஒரு கறுப்பு ஆடு ஒளிந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாகச் செயல்பட்ட இந்திய உளவுப் பிரிவினர், சுமித்குமாரை ரகசியமாகக் கண்காணித்து ஆதாரங்களுடன் வளைத்துப் பிடித்தனர். அவரிடமிருந்த செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தபோது, இந்தியப் போர் விமானங்களின் ரகசிய இருப்பிடங்கள், ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அவர் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சுமித்குமார் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள மத்திய விசாரணை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் தேசியப் பாதுகாப்பு முகமை (NIA) மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "பணத்திற்காகவா அல்லது வேறு ஏதேனும் 'ஹனி ட்ராப்' (Honey Trap) வலையில் சிக்கித் தேசத் துரோகம் செய்தாரா?" என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள மிக முக்கியமான விமானப்படை தளத்திலேயே இந்த உளவு வேலை நடந்துள்ளது இந்தியப் பாதுகாப்புத் துறையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!