பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு... 16 காளைகளை அடக்கி 2 பேர் சமநிலை... முதல் பரிசு கார் யாருக்கு? குலுக்கல் முறையில் முடிவு!

 
பாலமேடு ஜல்லிக்கட்டு

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

16 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்த மதுரை பொந்துகம்பட்டியைச் சேர்ந்த அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் சம எண்ணிக்கையில் காளைகளை அடக்கியதால், முதல் பரிசான கார் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கக் குலுக்கல் முறை கையாளப்பட உள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு

நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்தி மற்றும் மற்றொரு வீரர் தலா 11 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். களத்தில் நின்று விளையாடி வீரர்களைத் திணறடித்த சிறந்த காளைக்குத் டிராக்டர் மற்றும் கன்றுடன் கூடிய நாட்டின பசுமாடு பரிசாக வழங்கப்பட்டன.

இன்றைய போட்டியில் மொத்தம் 870 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. களத்தில் 461 வீரர்கள் காளைகளை அடக்க மல்லுக்கட்டினர். சுமார் 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்குத் தங்கக் காசுகள், இருசக்கர வாகனங்கள், பீரோ, கட்டில், மெத்தை மற்றும் ரொக்கப் பணம் எனப் பரிசுகள் மழையெனக் குவிந்தன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!