பழனி ஜல்லிக்கட்டு: 466 காளைகள் சீறிப்பாய்வு - மாடுபிடி வீரர்கள் 14 பேர் காயம் - வீரர்களுக்குப் பரிசுகள் மழை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூரில் அமைந்துள்ள ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று உற்சாகமாக நடைபெற்றது.
திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 466 காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு தகுதியான 400 மாடுபிடி வீரர்கள் மட்டுமே களமிறங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குச் சிறப்புச் சீருடைகள் வழங்கப்பட்டிருந்தன.

வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள், வீரர்களுக்குச் சவால் விடும் வகையில் திமிறிக்கொண்டு சீறிப்பாய்ந்தன. சில காளைகள் பிடிபடாமல் உரிமையாளர்களுக்குப் பெருமை சேர்த்தன; பல காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கித் தங்களது வீரத்தை நிரூபித்தனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், டி.வி., மின்விசிறி மற்றும் மரக்கன்றுகள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்தும், காளைகள் முட்டியதிலும் 14 வீரர்கள் காயமடைந்தனர். மைதானத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
