பலே ப்ளான்... திராவிட கட்சிகளுடன் கூட்டு... அண்ணாமலை கட்சியில் கொந்தளிப்பு!?

                                                                               - ‘ப்ரீத்தி’ கார்த்திக்
 
அண்ணாமலை

என் வழி தனி வழி எனக் கூறி தனது ரசிகர்களுக்கு பெப்பே காண்பித்தார் நடிகர் ரஜினிகாந்த். எப்ப வருவேன் எப்படி வருவேன் என தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் எனக் கூறி கடந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவர் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் கொரோனாவின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காரசார விவாதம் அரங்கேறியதாக தகவல்கள் கசிகின்றன. முன்னாள் தலைவர்கள் ஒரு அணியாகவும் தற்போதைய தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும் கம்பை சுத்தி இருக்கிறார்கள். சில கட்சிகளை பாரதிய ஜனதா கட்சியோடு இணைக்க அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறாராம். இதை அறிந்த அக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை கருத்தை வானதி ஸ்ரீனிவாசன கடுமையாக எதிர்த்ததாகவும் சொல்கிறார்கள். அதெல்லாம் சரி தலைவரே என்ன சொன்னாராம்? எதற்கு எதிர்த்தாராம்? சரியான கேள்வி கேட்ட மஹா, மழுப்பாதீங்க... சட்டுபுட்டுனு புட்டு வையுங்க...

முதல்வர் போய் ஓபிஎஸ்சை சந்திச்சு இருக்கிறாரே என்ன தலைவரே?  நான் என்ன கேட்டேன் நீங்க என்ன சொல்றீங்க?  கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்?

என்னமோ போங்க...

என்ன மஹா?  நான் எதைச் சொன்னாலும் நம்ப மாட்டியா? மூத்த தலைவர்களில் ஒருத்தர் அண்ணாமலைகிட்ட வார் ரூம் பற்றி கேள்வி எழுப்பி கொந்தளித்ததாகவும் எனக்கு கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கடமை இருப்பதாக நழுவிய அண்ணாமலை, வரும் தேர்தலில் திராவிட கட்சிகள் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே நாம் வளர முடியும்னும் சொல்லியிருக்கிறாராம்.

ஸ்டாலின் ஓபிஎஸ்

அவங்க போடுற பிச்சை சீட்டுக்காக நாம் நம்ம கட்சியை அடகு வைத்தால் காங்கிரஸ் போல கூடிய விரைவில் காணாமல் போய் விடுவோம் எனக் கூறியதுடன், விஜயகாந்த் தனியாக களம் கண்ட பொழுது திராவிட எதிர்ப்பை  கொள்கையாக கையில் எடுத்தார். அதிமுகவில் ஐக்கியமானதால் அதன் பின்னர் அவரோட பயணித்தவர்கள் சிலர் அதன் பின்னர் அணி மாறினார்கள். அதே போல சீமானை சுட்டிக் காட்டியவர் ஈரோடு கிழக்கில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இத்தனை பண பலத்திற்கு இடையேயும் அதே வாக்குகளைத் தக்க வைத்திருக்கிறார்கள் என்றால் எப்படி?

திராவிட ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைக்க நாம் தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றாராம். 

இதெல்லாம் சாத்தியமா தலைவரே?

அட நீ வேற மஹா..  இப்ப திராவிட கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளைப் பிரித்து அவர்களுக்கு புது நாம கரணம் சூட்டினால் முடிஞ்சு போச்சு. அதே திராவிடம் தானே. அதனை ஆட்டம் காணச் செய்ய வைக்க வேண்டும் என அடுக்கிக் கொண்டே போனாராம்.  இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்ட முன்னாள் தலைவரை நீங்க உங்க ஒருத்தர் வெற்றி பெற கட்சியை அழிக்க பார்க்காதீங்க என கடுமை காட்டினாராம்.

கடுப்பான அந்த தலைவர் தம்பி என் அரசியல் அனுபவம் தான் உங்க வயசு எனக் கூற, அப்படினா நீங்க ஏன்னே கட்சியை இவ்வளவு நாளா வளர்க்க பாடுபடல என பதிலுக்கு இவர் சூடோடு கேட்க, இருவருக்குள்ளும் வார்த்தை தடித்து இருக்கிறது.  அந்த முன்னாள் தலைவருக்கு இந்நாள் எம்.எல்.ஏ வானதியும் இசைவு தெரிவித்தாராம்.

இபிஎஸ் ராஜா

என்ன தான் நடக்கும்னு சொல்லுங்க தலைவரே?

மஹா.. நீ மூணாம் வகுப்புல காடு சிங்கம் மாடு கதை படிச்சு இருக்கியா? அதான் நடக்கப் போகுது. ஒண்ணு ஒண்ணு காலி பண்ணிட்டு தனிக்காட்டு ராஜாவாகப் போகிறார் அண்ணாமலை என கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் ரகசியமாக காதை கடித்தார்.

அப்படி யாருங்க உங்கள் நண்பர்?

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் நம்ம சோர்சை காட்டிக் கொடுக்க கூடாது. அது தான்யா பத்திரிக்கை தர்மம். 

என்ன தலைவரே.. ஏதேதோ சொல்றீங்க..?

கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும் என்று கூறியபடியே எகத்தாளமாக சிரித்தார் தலைவர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web