குருத்தோலை ஞாயிறு... கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்கள் குருத்தோலை பவனி!

 
குருத்தோலை

இன்று தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஏந்தி வந்தனர். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின்போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் ஒருபகுதியாக ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, தூத்துக்குடியில் உள்ள சின்னக்கோயில் என அழைக்கப்படும் திரு இருதய ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

குருத்தோலை

 திரு இருதய ஆலயத்தில் இருந்து மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் குருத்தோலை பவனி செல்லும் மக்கள்.
இதேப்போன்று உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்திலும் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதிலும் ஏராளமா இறைமக்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றனர். பின்னர், சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ, மறை மாவட்ட செயலர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் குருத்தோலையை மந்திரித்து, ஜெபம் செய்து பின்னர் இறை மக்கள் கையில் பிடித்தவாறு ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக ஆலயத்துக்குச் சென்றனர்.

குருத்தோலை

 புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில் குருத்தோலை பவனி செல்லும் மக்கள்.
பின்னர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்குமக்கள் பங்கேற்றனர்.

மேலும், மாநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளிலும், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?