ஏப்ரல் 1 முதல் இவைகளுக்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்!

 
ஆதார் பான் ஆதார் பான்

இந்தியாவில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிதி மற்றும் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. குறிப்பாக, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய 'வருமான வரிச் சட்டம் 2025' நடைமுறைக்கு வருகிறது. இந்த மாற்றத்தின் மூலம் 'வரி மதிப்பீட்டு ஆண்டு'  மற்றும் 'முந்தைய ஆண்டு' என்ற குழப்பங்கள் நீக்கப்பட்டு, இனி 'வரி ஆண்டு'  என்ற ஒரே முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் மாத சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் தங்களின் வருமான வரித் தாக்கலை மிக எளிதாகச் செய்ய முடியும் என மத்திய நேரடி வரிகள் வாரியம்  தெரிவித்துள்ளது.

பான் கார்டு

புதிய விதிகளின்படி, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எச்.ஆர்.ஏ  சலுகையைப் பெறுவதில் கூடுதல் தெளிவு கிடைத்துள்ளது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் 50 சதவீத வரி விலக்கைப் பெற முடியும். அதேபோல், அலுவலகப் பணிக்காக நிறுவனம் வழங்கும் போக்குவரத்துச் செலவுகளுக்கு இனி வரி கிடையாது என்பது ஊழியர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய நிம்மதியாகும். பான் (PAN) கார்டு விண்ணப்பிப்பவர்கள் இனி ஆதார் கார்டுடன் கூடுதலாகப் பிறப்புச் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-க்குப் பிறகு பழைய பான் படிவங்கள் செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்கி வாடிக்கையாளர்களுக்கும் சில மாற்றங்கள் காத்திருக்கின்றன. எச்டிஎப்சி, பிஎன்பி போன்ற முன்னணி வங்கிகள் ஏடிஎம் பணப் பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளன. இனி யூபிஐ (UPI) மூலம் ஏடிஎம்-மில் பணம் எடுப்பதும் மாதந்திர இலவச வரம்பிற்குள்ளேயே கணக்கிடப்படும்; அந்த வரம்பைத் தாண்டினால் ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து சுமார் 23 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். தமிழகத்தில் உள்ள 28 முக்கிய டோல்கேட்களில் சுங்கக் கட்டணம் உயர வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். வரி செலுத்துவதை ஒரு சுமையாகப் பார்க்காமல், எளிமையான டிஜிட்டல் முறைக்கு மக்களை மாற்றுவதே இந்த ஏப்ரல் 1 மாற்றங்களின் நோக்கம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!