நாளை திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பஞ்சப்பிரகார விழா! பக்தர்கள் உற்சாகம்!

 
திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில்

படைப்பு கடவுளான பிரம்மா, சிறிது நேர மனசஞ்சலத்தால் சாபத்திற்குள்ளாகி அவதிப்பட்டார். சாபநிவர்த்தி வேண்டி திருவானைக்காவலில் ஒரு குளம் ஏற்படுத்தி அக்குளக்கரையில் தங்கி சிவனை வேண்டி தவம் மேற்கொண்டு வந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், சாபவிமோசனம் அளிப்பதற்காக கைலாயத்திலிருந்து புறப்பட்டார். அப்போது, பார்வதிதேவி தானும் வருவதாகக்கூறவே, இருவரும் சேர்ந்து திருவானைக்கோவில் வந்தனர். ஏற்கனவே பெண்ணாசையால் தான் பிரம்மனுக்கு சாபம் கிட்டியது, எனவே பெண்ணாகிய நீ வரவேண்டாம் என்று ஈசன் கூறினார். அதற்கு பார்வதிதேவி மறுத்து அப்படி ஏதும் நடக்காது, எனினும் நான் ஆண்போல் வேடமிட்டு வருகிறேன், நீங்கள் பெண்போல் வாருங்கள் என்று கூறினாள். பார்வதிதேவி யோசனைப்படி பிரம்மனுக்கு சாபவிமோசனமளிக்க சுவாமி அம்மனாகவும், அம்மன் சுவாமியாகவும் வேடமணிந்து வந்தனர்.

திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில்

ஏற்கனவே தனது செயலால் கவலையிலிருந்த பிரம்மன், ஈசன், ஈஸ்வரி இவ்வாறு வந்ததால் மிகவும் வருந்தி ஈஸ்வரனைத் தொழுதார். இதையடுத்து சிவனும், பார்வதியும் பிரம்மனுக்கு சாபவி மோசனம் அளித்தனர். இந்த புராண சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் பஞ்சப்பிரகார விழா நிகழ்ச்சிகள் இக்கோயிலில் நடக்கிறது. பஞ்சப்பிரகாரவிழா புறப்பாட்டின்போது உற்சவ மூர்த்திகள் ஆரவாரங்களின்றி, நான்கு வேதங் கள், திருமுறைகள், பஞ்சாட்சரஜபம் ஆகியவற்றை மட்டும் கேட்டுக்கொண்டு நான்கு பிரகா ரங்களில் வலம் வருவார்கள். இதற்கு மவுனோத்சவம் என்று பெயர். பின்னர் தெற்கு நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளித்த பின் வாணவேடிக்கைகள் முழங்க, மேளதாளத்துடன், நாதஸ்வர இன்னிசை உடன் பஞ்சமூர்த்திகள் தங்களின் பிரகார உலாவைத் தொடருவார்கள்.

திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில்

புராண முக்கியத்துவம் வாய்ந்த இச்சம்பவமே இக்கோயிலில் பஞ்சப்பிரகார உற்சவமாக நடக்கிறது. இந்நாளில் கோயிலில் திருமுறை உள்ள ஐந்து பிரகாரங்களையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வலம் வருவதால் இந்த உற்சவத்திற்கு பஞ்சப்பிரகாரம் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. அதிலும் விபூதியைக்கூலியாகக்கொடுத்து சித்தரால் கட்டுவித்த தாகக் கூறப்படும் திருநீற்றான் மதிலை இந்த பஞ்சப்பிரகார நாளில் இக்கோயில் மூர்த்திகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வலம் வருவதால் இவ்விழா சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படு கிறது. இதை முன்னிட்டு நாளை மாலை உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும். இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்படுவர். முதல் நாள் மாலையில் தொடங்கும் விழாவானது மறுநாள் காலை வரை விடிய விடிய நடக்கும் அந்த வேளையில் பக்தர்கள் ஐந்து பிரகாரங்களையும் வலம் வருவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.

திருமுறை பாராயணம்: விழாவை முன்னிட்டு சிறப்பு பாராயணத்திற்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னணி ஓதுவார்கள் மூர்த்திகள் வேத விர்பண்ணர்கள் இரவு முழுவதும் பன்னிரு திருமுறைகளை வேத பாராயணங்களை முழங்க ஊர்வலப்பாதையில் வலம் வருவதைக்காண கண்கள் கோடி வேண்டும்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web