அதெல்லாம் முடியாது.... பணமிருந்தா வா.... லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவி அதிரடியாக கைது!

 
ஜீவா

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக, அதாவது டேங்க் ஆபரேட்டராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி உடல் நலக்குறைவால் கோவிந்தசாமி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிறகு, அவரது பணியை அவரது மனைவி பராசக்தி தொடர்ந்துள்ளார். ஆனால் இவருக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கவில்லை.

இது தொடர்பாக, தனது சகோதரர் ராஜனுடன் சென்று, ஊதியம் வழங்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவை சந்தித்து பராசக்தி கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி வலியுறுத்தி உள்ளார். மேலும், கணவர் கோவிந்த சாமி செய்து வந்த பணியை தனக்கு அல்லது தனது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவி ஜீவா நெருக்கடி கொடுத்துள்ளார்.

ஜீவா

தனது குடும்பம் வறுமையில் உள்ளதாக பராசக்தி கெஞ்சிய போது, ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவோ, 50 ஆயிரம் குறைத்து கொண்டு 4 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்க வேண்டும், இல்லையென்றால் வேறு நபருக்கு அந்த பணியை வழங்க நேரிடும் என ஊராட்சி மன்ற தலைவி கூறியதாக அவர் தெரிவித்தார். 

சில நாட்களுக்கு பிறகு மீண்டும் ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவை சந்தித்து பேசிய போது, நீ அடிக்கடி வெறும் கையில் வந்து சந்திக்க வேண்டாம். முதலில் 25 ஆயிரம் பணத்தையாவது முன் பணமாக வழங்க வேண்டும் என்றும் அப்போது தான் வேறு நபருக்கு பணி ஆணை வழங்காமல் என்னால் இருக்க முடியும் என்றும் கறாராக சொல்லி அனுப்பி விட்டதாக தெரிகிறது.

ஜீவா

இதனால் மனஉளைச்சல் அடைந்த பராசக்தி, இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களது அறிவுரையின் பேரில், போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவிடம் ரூ.25 ஆயிரத்தை பராசக்தி கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவை கைது செய்தனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான இடத்தை வழங்கியதால், கோவிந்த சாமிக்கு டேங்க் ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web