ஓட ஓட விரட்டி கொலை... முகத்தை சிதைத்து அரிவாளைச் சொருகிச் சென்ற கொடூரம்... கடலூரில் பரபரப்பு!

 
சாந்தி

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் மீனவ கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயது   மதியழகன். இவரது மனைவி 40 வயது சாந்தி  . சாந்தி அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர். மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார்.  இன்று காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட சென்றார். கோவிலில் சாமி தரிசனம் முடிந்து நடந்தே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் .  அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மதியழகனை சுற்றி வளைத்தது. கையில் வீச்சருவாளை எடுத்ததும் மதியழகன் தப்பிப்பதற்காக ஓடத்தொடங்கினார்.  அந்த கும்பல் மதியழகனை விடாப்பிடியாக துரத்தி சென்று நடுரோட்டில் சரமாரியாக வெட்டினர். மர்மகும்பலின் கொலை வெறித் தாக்குதலில்  முகம் முழுவதும் சிதைந்து உருக்குலைந்தது.

அடித்தே கொலை

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த கும்பல் மதியழகன் முகத்தில் வீச்சரிவாளை சொருகிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றது.   காலை பொழுதில்  நட்ட நடு சாலையில் மர்ம கும்பல்  கொலை செய்ததை பார்த்த பொதுமக்கள் பயந்து ஓடி ஒளிந்து கொண்டனர். வாகனஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  இச்சம்பவம் குறித்து தகவல் பரவியதும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள்   100க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் நடந்து விடாமல் காக்கும் பொருட்டு அங்கு கூடியிருந்த   அனைவரையும் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் ஊராட்சி மன்றத் தலைவியான மதியழகன் மனைவி மற்றும் அவரது மகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதியழகன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் முதற்கட்ட தகவல்கள் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன.

 அதன்படி , குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் மனைவி சாந்தியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தரப்பும் போட்டியிட்டனர். இதில் மதியழகன் மனைவி சாந்தி வெற்றி பெற்றார். அப்போது மாசிலாமணி தரப்பினர் மதியழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மனைவி வெற்றி பெற்றாலும் ஊருக்குள் சென்றால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாக்கு எண்ணும் மையத்திலேயே காத்து கிடந்தார். பின்னர்  காவல்துறையின் பாதுகாப்புடன் ஊருக்குள் சென்றார்.   போலீசார்   இரு தரப்பினரையும் அழைத்து சரியான முறையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர். இருந்தபோதும் இவர்களுக்குள் தொடர்ந்து விரோதம் இருந்து வந்தது.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

மாசிலாமணி தம்பி மதிவாணனை கண்டக்காடு பகுதியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். தொடர்ந்து படகுகள், வலைகளை எரித்தும், வீடுகள் அடித்தும் நொறுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதியழகன்  ஜாமீனில் வெளியில் வந்தும் மீண்டும் தங்களது ஊருக்கு செல்லவில்லை. இதன் காரணமாக அனைவரும் தங்களது உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தங்கி வந்தனர் .  தனது தம்பியை கொலை செய்த மதியழகனை மாசிலாமணி தரப்பினர் பழிக்குப்பழி வாங்க கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்த சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web