மார்ச் 23ம் தேதி பங்குனி தேரோட்டம்... திருவானைக்காவல் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்!

 
திருவானைக்காவல் திருச்சி தேர்

மார்ச் 23ம் தேதி பங்குனி பெருவிழாவை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் கோயில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் பரபரவென செய்யப்பட்டு வருகிறது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆண்டு தோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா தொடர்ந்து 48 நாட்கள் கொண்டாடப்படும்.

இந்தாண்டுக்கான விழா கடந்த 1ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் புறப்பாடு நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற மார்ச் 23ம் தேதியன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றமும் நேற்று பிரகாரத்தில் ஸ்வாமி வலம் வந்த நிகழ்வும் நடந்தது.

திருவானைக்காவல் திருச்சி தேர்

இதற்காக உற்சவர்கள் பிரகாரத்தின் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பெரிய, சிறிய கொடிமரங்களிலும் சுற்றி வலம் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்திற்கு 8 மணிக்குள்ளும் அடுத்தடுத்து மண்டபத்தில் இருந்து காலை புறப்பட்டு வர அர்ச்சகர்கள் ஏற்றி வைத்த கொடிமரத்திற்கு வந்தனர். அங்கு சிறப்பு அம்மன் புறப்பாடு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 4 ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவானைக்காவல் திருச்சி தேர்

வரும் 23ம் தேதி காலை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று தொடங்கி தினமும் வெவ்வேறு இடங்களில் மண்டகப்படிகளும், தினமும் மாலை வேளையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 23ம் தேதி நடைபெறும். இதற்காக திருதேர் செப்பணிடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web