இன்று பழனியில் பங்குனி உத்திர தேரோட்டம்... லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

 
பழனி பங்குனி

இன்று பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நேற்று காலை முதலே லட்சக்கணக்கில் பக்தர்கள் பழநியில் குவிய துவங்கியுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது.

மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பங்குனி உத்திரம்

விழாவின் ஆறாம் நாளான நேற்று ஏப்ரல் 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் வள்ளிநாயகியம்மன் திருமுருகன் திருக்காட்சி நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சந்நிதி வீதி, கிரி வீதிகளில் சுவாமி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக, 7ம் நாளான இன்று ஏப்ரல் 11-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

மாலை 4.30 மணிக்கு தேர் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டு, கிரி வீதிகளில் வலம் வருகிறது. விழாவின் நிறைவாக, ஏப்ரல் 14-ம் தேதி இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

பழனி

பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு, லட்சக்கணக்கில் பக்தர்கள் விரதம் இருந்து, கொடுமுடி சென்று ஆற்றில் தீர்த்தக் காவடி எடுத்து பழநி வந்து பக்தர்கள் வழிபடுவர். பன்னீர் காவடி, பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வழிபடுவது பங்குனி உத்திரத் திருவிழாவின் சிறப்பாகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web